உடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன்
உணவுகளை சாப்பிடுங்க!!!
உடல் ஆரோக்கியமாக இருக்க உண்ணும் உணவில் புரோட்டீன் அதிகம் இருக்கும்
உணவுகளை உண்ண வேண்டும்.
அதிலும் அசைவ உணவுகள் என்றால் எவற்றில் புரோட்டீன் அதிகம் உள்ளது
என்பதை எளிதில் சொல்லி விட முடியும். ஏனெனில் அசைவ உணவுகளான ஆட்டுக் கறி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றை உண்டாலே உடலுக்குத் தேவையான அளவு புரோட்டீன் கிடைத்துவிடும். ஆனால் அதுவே சைவ உணவுகளில் சொல்லச் சொன்னால் மிகவும் கடினம். ஏனென்றால் அத்தகைய சைவ உணவுகளில் நிறையவே புரோட்டீன்கள் உள்ளன.
அதிலும் புரோட்டீன் இருக்கும் உணவுகளை அதிகம் உண்டால் தான், உடலில் புதிய செல்கள் உருவாவதோடு, திசுக்களும் நன்றாக பராமரிக்கப்படும். ஆகவே எதை சாப்பிட்டாலும் அதில் புரோட்டீன் இருக்கிறதா என்பதைப் பார்த்து, ஒரு நல்ல வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ வேண்டும். அவ்வாறு உடலுக்கு தேவையான புரோட்டீன்களை எந்த உணவை சாப்பிட்டால் எளிதில் கிடைக்கும் என்பதை படித்துத் தெரிந்துகொண்டு, அதனை தினமும் தங்கள் உணவில் சேர்த்து பின்பற்றி வந்தால், உடல் எடை குறைவதோடு, உடல் மிகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக