தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை

ஆண்களின் ஆயுளை குடிக்கும் ஆண்மை: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்


ஆண்களுக்கு கம்பீரமும், அழகும் தருவது அவர்களின் ஆண்மைதான். அதே ஆண்மையை தரும் ஹார்மோனே அவர்களின் உயிருக்கு உலை வைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை என்கிறது ஆய்வு முடிவு ஒன்று.
ஆண்களை விட பெண்களே அதிக ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ்கின்றனர். உலக அளவில் ஆண்களின் ஆயுட்காலம் குறைவாகவே இருக்கிறது இதற்குக் காரணம் ஆண்களின் ஆண்மைத்தன்மைதானாம்.

கார்ப்பரேட் கம்பெனி வேலை: கைநிறைய சம்பளம்! நோய் போனஸ்!!


ஆபிஸ் ஃபுல்லா ஏசி, தூசி படாத வாழ்க்கை, கை நிறைய சம்பளம், அவனுக்கு என்னப்பா ராஜ வாழ்க்கை என்று கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்களைப் பார்த்து பொறாமைப்படுபவரா நீங்கள். அவசரப்படவேண்டாம். கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் 72 சதவிகித ஊழியர்களுக்கு இதயநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு முடிவு ஒன்று எச்சரிக்கின்றது.
உலக இதயதினத்தை ஒட்டி அபாயகரமான வேலைகள் பற்றியும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும் ASSOCHAM கணக்கெடுப்பு ஒன்று நடத்தியது. அதில் பகல்நேர வேலை பார்ப்பவர்களை விட இரவு நேர வேலை பார்ப்பவர்களுக்கு 52 சதவிகிதம் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களுக்கு ஏற்படும் மாறுபாடான தூக்கம், ஜங்க் ஃபுட் சாப்பிடுவதுவது, சரியான உடற்பயிற்சியின்மை போன்றவையே என்கின்றனர் ஆய்வாளர்கள்.


வீட்டில் ஆவி பிடிக்கலாம்?


முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், ஆவி பிடிப்பது போல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப் பொருட்களும் வேறுபடும். ஒரு வேளை மாற்றி பயன்படுத்திவிட்டால், அதனால் தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகவே எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். மேலும் இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது. இதனை எந்த நேரத்திலும், வீட்டில் சூடான நீரை வைத்து செய்யலாம்.
how steaming face benefits your skin


வாகனங்களுக்கு எந்த நேரத்தில் பெட்ரோல் நிரப்பினால் சரியானது?


வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதற்கு அதிகாலை மற்றும் இரவு நேரம்தான ஏற்றது என்கின்றனர் ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள்.
பெட்ரோல் எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டது. எனவே, குளிர்ச்சியான சமயங்களில் பெட்ரோல் நிரப்பும்போதுதான் அதன் அடர்த்தி சரியானதாக இருக்கும்.

ட்யூப்லெஸ் டயரில் பஞ்சர் போடுவதற்கான எளிய வழிமுறை


வாகனங்களை பயன்படுத்தும்போது சின்ன சின்ன மெக்கானிக் வேலைகளை கைவசம் வைத்திருப்பது அவசியம். இல்லையென்றால், சில சமயம் நடுரோட்டில் படாத அவஸ்தை பட வேண்டியிருக்கும்.
அந்த வகையில், தற்போது ஹோண்டா ஆக்டிவா முதல் பல்சர் 200 வரை பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் ட்யூப்லெஸ் டயருடன்தான் வருகின்றன.

நடைப் பயிற்சி


நடைப் பயிற்சி பற்றிச் சில முக்கிய விபரங்களைக் கேள்வி பதிலாகத் தொகுத்துள்ளேன். பத்து 

1.நடப்பதற்கு முன் ஏதாவது சாப்பிடலாமா?


நிச்சயம் சாப்பிடலாம்! கீழே கொடுத்துள்ளபடி முறையாகச் சாப்பிட்டு விட்டு நடக்கலாம் :


* முழுதானிய ( ஓட்ஸ், அவல்,) சிற்றுண்டி
* முழு கோதுமை பிரட்* வாழைப்பழம


* சாப்பிடுவது வயிற்றை நிரப்புவதாக இல்லாமல் குறைந்த அளவாக இருக்க வேண்டும்.
* கொழுப்பு நிறைந்ததாக இருக்கக் கூடாது.
* நடப்பதற்கு 1 மணிநேரம் முன்னதாக சாப்பிட வேண்டும்.
* சாப்பிட்டால் நீரும் அருந்த வேண்டும்.




தீ ஆபத்துதான் !


தீ விபத்து ஏற்படுகையில் நாம் அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள் !!!!


பல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொண்டால் ஆபத்துதான். தீ விபத்துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம். இந்த ஆபத்துகளில் இருந்து உங்கள் உடமை, உயிர்  உறவினர்கள் யாவரையும் காப்பாற்ற அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள்.....




* நீங்கள் அறிந்து எங்காவது தீப்பற்றிக் கொண்டால்  உடனே தீயணைப்புத் துறைக்கு (போன் எண் 101) தகவல் தெரிவியுங்கள்.

* எண்ணை மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள்.

* விபத்தின்போது தீப்பிடித்து எரியும் நபரின் அருகில் நீங்கள் இருந்தால் உடனே அவரை கீழே தள்ளி கம்பளம் – போர்வை, கோணி இதில் ஏதாவது ஒன்றினால் அவரை இறுகச் சுற்றினால் தீ பரவாமல் அணைந்து விடும்.

* ஆடையில் தீப்பற்றி விட்டால் பயந்து ஓடக்கூடாது. ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்துக் கொள்ள வேண்டும்.

* சூடான பாத்திரங்களை தொடுவதனாலோ, கொதிக்கும் சூடான எண்ணெய் தெறித்து விழுவதினாலோ, சூடான பொருள் உடலின் மீது விழுவதனாலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்களை கையினால் தேய்ப்பதோ, நகத்தால் கிள்ளுவதோ கூடாது. அப்படி செய்தால் விஷக் கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். அந்தக் கொப்புளங்களின் மீது `ஆன்டிசெப்டிக்’ மருந்துகளை வைத்து லேசாக கட்டுப்போட வேண்டும்.

* தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை காயத்தின் மீது தடவலாம். முட்டையின் வெள்ளைக் கருவை புண்ணின் மீது தடவினால் எரிச்சல் குறையும்.

* கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூட வேண்டும். இது வலியை குறைக்கும்.

* தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக் கூடாது.

* இரண்டு கரண்டி சமையல் சோடாவை நீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியை அந்த நீரில் நனைத்து தீப்புண்ணை மூடலாம். துணி காய்ந்துபோனால் மீண்டும் அந்த நீரை சொட்டு சொட்டாக விட்டு நனைக்கலாம்.

* தீக்காயம் பட்டவருக்கு அடிக்கடி உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் இவற்றைக் கொடுக்கலாம்.

* தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

கூகுள் பிறந்த நாள்!


ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளையும், உலகின் சரித்திர நாயகர்களின் பிறந்த நாளையும், தனது கூகுள் டூடில் பக்கத்தின் மூலம் கொண்டாடி வருகிறது கூகுள் நிறுவனம். இப்படி டூடில் பக்கத்தின் மூலம் மக்களுக்கு சில தகவல்களையும் வழங்கி வரும் கூகுள், தனது பிறந்த நாளையும் இதில் தெரிவித்து இருக்கிறது.
Happy Birthday, Google!

நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை..


ஒருவர் எதற்கெடுத்தாலும்
மனைவியுடன்
சண்டைப் போடுவார்..


நீண்ட நேரமாக உட்காருறீங்களா? நிறைய பிரச்சனை வருமாம்!!!


இன்றைய காலத்தில் நன்கு குனிந்து, நிமிர்ந்து வேலை செய்பவர்களை விட, நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் தான் அதிகம். அதிலும் சாப்ட்வேர் அலுவலகங்கள் மற்றும் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்கள் உட்கார்ந்து கொண்டே அனைத்து வேலைகளையும் முடித்துவிடுவார்கள். அவ்வாறு உட்கார்ந்து கொண்டே இருந்தால், உடலில் இதுவரை வராத நோய் கூட வந்துவிடும். உட்கார்வதால் உடல் ரிலாக்ஸ் ஆகும் தான், அதுவே நீண்ட நேரம் உட்கார்ந்தால், உடல் பாதிப்பு தான் அடையும். அதிலும் தொடர்ந்து 8-10 மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தால், சொல்லவே வேண்டாம். இப்போது அவ்வாறு நீண்ட நேரம் உட்கார்ந்தால் என்னென்ன பிரச்சனைகள் வருகிறதென்று பார்ப்போமா!!!
What Happens When You Sit Long Hour

கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!


எப்படிப்பா இந்த சிகரெட் 'குடிக்கும்' பழக்கத்தை நிறுத்துவது...உலகம் முழுவதும் இதே பிரச்சினைதான்!. எத்தனையோ உபாயங்களை பலரும் சொல்கிறார்கள், என்னென்னவோ பண்ணிப் பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால் புகை பிடிப்பதை அடியோடு நிறுத்த அல்லது வெகுவாக குறைக்க ஒரு ஈசியான வழி உள்ளது..
புகை பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் கூடப் பிறந்தது அல்ல, இடையில் வந்ததுதான். எனவே அதை நிறுத்துவது என்பது மலையை சாய்க்கும் காரியம் அல்ல, சற்றே மனது வைத்தால் போதும். மனக் கட்டுப்பாட்டை சற்றே உறுதியோடு கடைப்பிடித்தாலே போதும் இதை எளிதில் சமாளிக்கலாம்.
 Quit Smoking 3 Days

தோல்வி இல்லை தோழா !

எனக்கு எப்போதும் தோல்விதான், கொஞ்சம்கூட ராசி இல்லாதவன், வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை'' என்று பலரும் புலம்பக் கேட்டிருப்போம்.

ஒரு வியாபாரத்தைத் தொடங்கி, அதில் சின்னஞ்சிறு சறுக்கல் வந்தால்கூட சோர்ந்து போய்விடும் பலரையும் பார்த்திருப்போம். இதில் உண்மை என்னவெனில், எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாகச் செய்ய நினைத்து அதில் தோல்வி அடைந்தவர்கள் அதே செயலில் சின்னச் சின்ன மாற்றங்களை மட்டும் செய்துவிட்டால் வெற்றிக்கனியைச் சுலபமாகச் சுவைக்க முடியும்.

வாடிக்கையாளர்கள் தேடிவந்து வாங்குவதைவிட, நாமே தேடிப்போய் கொடுக்கலாமே என்ற முயற்சியில் இறங்கி, முதல்முதலாக தவணை முறைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதில் மாபெரும் சாதனையும் படைத்தது ஒரு நிறுவனம். வீட்டில் இருக்கிற கட்டில் இடத்தை அடைக்கிறதே என்று ஒருவர் சிந்தித்ததன் விளைவு, அது மடக்கு நாற்காலியாக மாறியது. இதனால் மடக்கு நாற்காலிகளின் விற்பனையும் பல மடங்குகளாகப் பெருகியது.

ஒரு காலத்தில் அஞ்சல் அலுவலகத்தில் உரிமம் பெற்று வீட்டில் ரேடியோ வைத்துக் கொண்டிருந்த காலங்களில் பாடல்களையோ அல்லது செய்திகளையோ வீட்டில் மட்டும்தான் கேட்க முடிந்தது. மற்ற இடங்களில் கேட்க முடியவில்லையே, அதற்கு என்ன செய்வது என்று மாற்றிச் சிந்தித்ததன் விளைவு, அது பாக்கெட் ரேடியோவாக மாறியது. இந்த பாக்கெட் சைஸ் ரேடியோவில் வருகிற சத்தமும் பலருக்கு இடையூறாக இருக்கிறதே என்று சிந்தித்ததன் விளைவு, அது வாக்மேனாகிப் போனது. ரேடியோ-பாக்கெட் ரேடியோ-வாக்மேன். இவை மூன்றுமே சிறிது மாற்றிச் சிந்தித்ததன் விளைவால் இவற்றின் விற்பனை அந்தந்தக் காலங்களில் ஒரு பெரும் புரட்சியையே ஏற்படுத்தின.

விற்பனையின் அளவை அதிகப்படுத்தவும், பல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும்இருக்க பற்பசை நிறுவனம் ஒன்று ஒரு சிறு மாற்றத்தை மட்டும் செய்து பார்த்தது. அது என்னவெனில், பற்பசை வெளிவரும் சிறு துளையை மட்டும் தற்போது இருப்பதைவிட கொஞ்சம் பெரிதாக்கினால் என்னாகும் என்ற வித்தியாசமான சிந்தனையை அமல்படுத்திப் பார்த்தது. பற்கள் சுத்தமாகின, வாடிக்கையாளர்களும் மகிழ்ந்தார்கள், விற்பனையும் அதிகரித்தது. இதனால் அந்த நிறுவனத்தின் லாபமும் மறைமுகமாக அதிகரித்தது.

சோப்பு, ஷாம்பு, ஊதுபத்தி உள்ளிட்டவற்றின் உற்பத்தி நிறுவனங்கள்கூட விநோதமான விளம்பரங்களையும், சின்னச் சின்ன மாற்றங்களையும் செய்து விற்பனையைப் பல மடங்கு உயர்த்தியிருக்கின்றன. விலை உயர்ந்த பட்டு ரகங்களைக்கூட, பேரம் பேசாமல் சொன்ன விலைக்குத்தான் வாங்கிச் செல்ல வேண்டும் என்ற டெக்னிக்கை முதல் முதலில் துணிச்சலாகக் கையாண்டது ஒரு பட்டு நிறுவனம். ""தரமே நிரந்தரம் அதுதான் எங்கள் தாரக மந்திரம்'' என்ற வாசகத்தை வாடிக்கையாளர்களின் மீது தெளித்து, அவர்களை உள்வாங்கிக் கொண்டது அந்த பட்டு விற்பனை நிறுவனம்.

வேட்டியே கட்டாத, கட்டத் தெரியாத இளைஞர்களைக் கவர அதே வெள்ளை நிறத்தில் பனியன், கைக்குட்டை, பெல்ட், செல்போன் கவர் என்று அவர்களின் தேவையை அறிந்து, பூர்த்திசெய்து வேட்டி கட்டாதவர்களையும் வேட்டி கட்ட வைத்துவிட்டது ஒரு வெண்ணிற ஆடை தயாரிப்பு நிறுவனம். வேட்டி கட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறதே என்று கவலைப்படாமல் சிறிது மாற்றிச் சிந்தித்ததன் விளைவால் விற்பனையிலும் புரட்சி செய்திருக்கிறது அந்த நிறுவனம்.

 



பாதங்களை சரியா கவனிங்க... இல்லைன்னா நிறைய பிரச்சனைகள் வந்துடும்!!!


அனைத்து பெண்களுக்கும் பாதங்கள் நன்கு மென்மையாக பட்டுப் போன்று இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அத்தகைய ஆசை இருந்தால் மட்டும் போதாது, முறையாக பாதங்களை கவனிக்க வேண்டும். ஏனெனில் பெண்கள் வீட்டில் நிறைய வேலைகளை செய்வதன் காரணமாக அவர்களால் வீட்டில் எப்போதும் காலணிகளை அணிந்து கொண்டே இருக்க முடியவில்லை. மேலும் சிலர் அழகான நடை வேண்டும் என்பதனால், உயரமான ஹீல்ஸ் போடுவது என்று இருக்கின்றனர்..
Common Foot Skin Problems

பணத்தை உருவ உங்கள் டெபிட் கார்டு எண்ணே போதும் ......!


உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை உருவ உங்கள் டெபிட் கார்டு எண்ணே போதும் ...


பெங்களூருவில் உள்ள எங்கள் அலுவலகத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த உண்மைச் சம்பவம் இது. இதன் நாயகன் பெயர் கிரிஷ் [பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது]. எங்கள் அலுவகத்தில் உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட கம்பியூட்டர்களுக்குத் தேவையான மென்பொருள், வன்பொருள், இணைய இணைப்பு எல்லாம் மேலாண்மை செய்து எந்தப் பிரச்சினை வந்த
ாலும் சமாளிக்க வேண்டியது இவருடைய பொறுப்பு. எனவே கணினியைப் பற்றிய எல்லா விஷயமும் அத்துபடி. இவருக்கு ஷேர் மார்க்கெட்டிங்கில் ஈடுபாடு அதிகம். ஷேர் பரிமாற்றம், வங்கி கணக்கு பரிமாற்றம் எல்லாம் ஆன்லைனில் செய்வதால் இவருக்கு இணைய வழி பண பரிவர்த்தனைகளும் அத்துபடி...



USB Device Not Recognized என்ற பிழைசெய்தியை தடுக்க

USB Device Not Recognized என்ற பிழைசெய்தியை தடுக்க

நிறைய நேரங்களில் இவ்வகையான செய்தி உங்கள் கணிப்பெறியின் வலதுமூலையில் எதேனும் USB  சாதனங்களை இணைக்கும் போது தோன்றும் இவற்றை தடுப்பதற்கு Registry யில் ஒருசில மாற்றம் செய்யவேண்டும்.




COPMPUTER ஐ வேகமாக Boot செய்ய வேண்டுமா ?


உங்கள் COPMPUTER ஐ வேகமாக செய்ய சில வழிமுறைகள்

ஒரு சில நேரங்களில் உங்கள் கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கி மிகவும் சோதனை செய்யும், அப்படிபட்ட நேரங்களில் உங்கள் கணினியை வேகமாக  இயங்க கீழ்கண்ட வழிமுறைகளை செய்து பார்க்கலாம் !



சில நோய்களுக்கான ஈஸியான வீட்டு மூலிகை மருந்துகள்!!!

உடல் நலம் சரியில்லை என்றால் நிறைய பேர் உடனே மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஒருசிலர் நமது பாரம்பரிய மருந்துகளை பின்பற்றுவார்கள். ஏனெனில் நமது பாரம்பரிய வீட்டு மருந்துகளின் அருமை அவர்களுக்கு நன்கு தெரிந்திருப்பதே ஆகும். ஆனால் சிலருக்கு அதன் அருமை, அதனைப் பற்றிய ஒரு நன்மைகள் சரியாக தெரியவில்லை. மேலும் நிறைய மக்கள் கெமிக்கல் உள்ள மருந்துகளை பயன்படுத்துதைவிட, மூலிகை மருத்துவமான ஆயுர்வேதத்தை தான் பின்பற்றுகிறார்கள். ஆகவே அத்தகைய ஆயுர்வேத மருத்துவத்தில் நீரிழிவு, சளி, இருமல் மற்றும் ஜலதோஷம் போன்றவற்றிற்கு எந்த மூலிகைகளை பயன்படுத்தினால் நல்லது என்பதைப் பற்றி பார்ப்போமா!!!

நீரிழிவிற்கு...
herbal remedies diseases

இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்பா!


பூனையில் சைவம் கிடையாது, ஆண்களில் ராமன் கிடையாது என்று நம் ஊர் கவிஞர் ஒருவர் எழுதியிருந்தார். இது எல்லா நாட்டு ஆண்களுக்கும் பொருந்தும். உலகம் முழுவதும் 2.7 மில்லியன் ஆண்கள் தங்களின் மனைவியை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்று அதிர்ச்சித்தகவலை தெரிவிக்கிறார் க்ரே நியூமென் என்ற எழுத்தாளர்.
மனித மனதில் எண்ணற்ற ஆசைகள் குடியேறி ஆட்டிப்படைக்கின்றன. பணம், பொருள் மட்டுமல்ல பாலியல் உணர்வுகளும் தூண்டிவிடப்பட்டு ஆண்களையும், பெண்களையும் ஆட்டிப்படைக்கிறது. இதனால் மரபு மீறிய செயல்களும், இலக்கணப்பிழைகளும் ஆங்காங்கே நேர்கிறது.
Besides Sex Other Reasons Men Cheat

மின்சார பற்றாக்குறைக்கு காரணம் யார் ? ஒரு கருத்துக் கணிப்பு


மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், பல மணி நேரம் தொடர் மின் தடை ஏற்படுவதால், தொழில் துறையினரும், விவசாயிகளும் கடும் பாதிப்படைந்துள்ளனர். அதிக மின் தடையைக் கண்டித்து, அவர்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.


புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?


நண்பர்கள் பலரும் அலைபேசியில் அழைக்கும் போது, என்ன மாதிரி கணினி வாங்கலாம் என்று ஒரு கேள்வி கேட்கின்றார்கள். நன்றாக கணினியில் இயங்கும் நண்பர்கள் என்ற போதும், நிறைய நண்பர்களுக்கு கணினி Configuration எனப்படும் ஒன்று தெரிவது இல்லை. அவற்றைப் பற்றி இன்று விரிவாக காண்போம். இதில் ஒரு புதிய கணினி, மடிக்கணினி நீங்கள் வாங்கும் போது இவற்றை தான் கட்டாயம் பார்க்க வேண்டும். 


சிங்கப்பூர் வேலை வாய்ப்பு


சிங்கப்பூரில் உள்ள  பிரபல நிறுவனத்திற்கு அலுவலக
உதவியாளர் வேலைக்கு குறைந்தது 1 வருட முன்அனுபவம்
உள்ளவர்கள் தேவை.




எப்புடி இருந்த நயன் இப்படி ஆயிட்டாரே !


சென்னை: ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் முன்பெல்லாம் கலகலவென்று பேசும் நயன்தாரா தற்போது இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருக்கிறாராம்.
What Happened Nayanthara

முறியும் நிலையில் உள்ளதா உங்கள் உறவு...?


தொடக்கம் என்று இருந்தால் நிச்சயம் முடிவு என்றும் ஒன்று கூடவே இருக்கும். அதுபோலத்தான் பிரிவும். அது வரும்போது எதிர்கொள்ளத் தயாராகிக் கொள்வதுதான் எல்லோருக்கும் நல்லது.
ஒவ்வொரு உறவும் ஒரு கட்டத்தில் உராய்வுகளையும், உரசல்களையும், சந்திக்க நேரிடுகிறது. இதுபோன்ற நிலையில் பல உறவுகள் முறியும் நிலைக்குப் போய் விடுகின்றன.
பிரிவோம் என்ற வார்த்தையைச் சொல்லவே பலருக்கு கிலியாக இருக்கும். பிரிந்து விடுவோம், ஒருவரை ஒருவர் மறந்து விடுவோம் என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதை பதைத்துப் போய் விடுகிறது. இனிமேல் நமக்குள் எதுவும் இல்லை என்பதைச் சொல்ல பலருக்கும் தைரியம் வருவதில்லை. ஆனால் இனியும் உறவைத் தொடர முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படும்போது என்னதான் செய்வது...?

பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவிக்க !


Glitter Graphics | http://ttpkarthikeyan.blogspot.in/p/birthday-wishes-form.html/
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

ஓர் அறிய நற்செய்தி உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உங்கள் குழைந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்களை இந்த தளத்தில் இடம் பெற வேண்டுமா ?....

கணினியில் USB PORTஐ DISABLE செய்வது எப்படி ?


USB PORT அனைவருக்கும் பயன் உள்ளதாக இருந்தாலும் பள்ளி ,கல்லூரி மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் USB னை பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும். இதற்கான காரணம் வைரஸ் மூலம் கம்ப்யூட்டர்க்கு பாதிப்பு வந்துவிடும் என்ற நோக்கில் DISABLE செய்யப்பட்டு இருக்கும்.
இதை எப்படி செய்யும் வழிமுறைகளை காண்போம்.
முதலில் REGISTRY EDITOR செல்லவேண்டும் அதற்க்கு ,
Press START &  Press RUN

சாட்டை - சிறப்பு விமர்சனம்!


நடிகர்கள்: சமுத்திரக்கனி, யுவன், தம்பி ராமய்யா, ஜூனியர் பாலையா, யுவன், பாவா லட்சுமணன், கருத்தபாண்டி, மகிமா, சுவாசிகா

ஒளிப்பதிவு: ஜீவன்
இசை: டி இமான்
பிஆர்ஓ: மவுனம் ரவி
தயாரிப்பு: இயக்குநர் பிரபு சாலமன் (ஷாலோம் ஸ்டுடியோஸ்) 
எழுத்து - இயக்கம்: எம் அன்பழகன்

சமூக அக்கறையும் சமரசமில்லாத திரைக்கதையும் இயல்பான பாத்திரங்களுமாய் வந்து அவ்வப்போது மனதை வெல்லும் படங்களின் வரிசையில் இன்னும் ஒரு படம், சாட்டை.
saattai movie review

ஓரிரு இடங்களில் சினிமாத்தனமான உணர்ச்சிக் குவியலாய் காட்சிகள் அமைந்தாலும், அவற்றில் பெரிதாக நெருடலேதும் இல்லாததால், படத்துடன் ஒன்ற முடிகிறது.
ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் படித்து வந்த அரசுப் பள்ளி, ஆசியர்களின் அக்கறையின்மை, சோம்பேறித்தனம், ஒழுங்கின்மையின் உச்சத்தால் உருப்படாமல் போகிறது. புதிதாக அந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வருகிறார் இளம் ஆசிரியர் தயாளன். ஒரே ஆண்டில் அந்தப் பள்ளி ஒழுக்கம், கட்டுப்பாடு, கலைகள், விளையாட்டு என அனைத்திலும் மேன்மை பெற்று மாவட்டத்திலேயே முதலாவது பள்ளியாக வருகிறது...
எப்படி இது சாத்தியமானது? இந்தக் கேள்விக்கான விடையை ஒவ்வொரு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல, தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள்... குறிப்பாக பெற்றோர்களும் தவறாமல் பார்த்துத் தெளிய வேண்டியது இன்றைய அவசியம்!
நேர்மை, ஒழுக்கம், தொலைநோக்குப் பார்வை, எதற்கும் கலங்காத நேரிய சிந்தனை கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியராக சமுத்திரக்கனி. சற்றும் அலட்டிக் கொள்ளாத, நடிப்பென்று சொல்ல முடியாத நடிப்பு.
ஒழுங்கீனமான மாணவர்களை அவர்கள் போக்கிலேயே போய் வெல்வதும், கடைசி வரை ஒத்துழைக்க மறுக்கும் சக ஆசிரியர்கள், கடைசியில் தங்களை அறியாமலேயே கற்றுத் தருதலில் மகா ஆர்வத்துடன் இயங்கச் செய்வதும், அந்த ஸ்போர்ட்ஸ் மீட்டை அவர் நடத்தும் விதமும்... ஒரு பள்ளியின் நிகழ்வுகளை அசலாகக் கண்முன் நிறுத்தின.
அரசுப் பள்ளிகளில் படித்த ஒவ்வொருவரும் நிச்சயம் ஒரு தயாளனைச் சந்தித்திருப்பார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒன்றிரண்டல்ல.. குறைந்தது அரை டஜன் சிங்கப்பெருமாள்களாவது (தம்பி ராமய்யா) ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் இருக்கவே செய்கிறார்கள். தங்கள் பள்ளிக்கு ஸ்போர்ட்ஸ் மீட் நடத்தும் அந்தஸ்தைப் பெற்றுத் தந்த தயாளனுக்காக தலைமையாசிரியர் கைத்தட்டச் சொல்லும் இடத்தில் தம்பி ராமையா ஒரு பாவம் காட்டுகிறாரே... க்ளாஸ்!
உள்ளே போவதும் வருவதுமாக இருக்கும் அந்த அழுக்கு சாக்ஸ்.. அழுத்தமான குறியீடு!
தன் காலத்தில் பள்ளி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பாதா... என்ற ஆதங்கமும், சக ஆசிரியர்களைக் கட்டுப்படுத்த முடியாத இயலாமையும் சதா முகத்தில் இழையோட வரும் தலைமை ஆசிரியராக ஜூனியர் பாலையா. மனதை நெகிழ்த்துகிறார்.
இந்தக் கதையில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவன் - மாணவி காதலும் உண்டு. அந்தக் காட்சி வரும்போதெல்லாம் மனசு பதறுகிறது. நல்ல வேளை, அந்தக் காதலின் முடிவு யாருக்கும் பாதகமில்லாமல் அமைக்கப்பட்டிருப்பதில் ஒரு நிம்மதி. இந்தப் பாத்திரங்களில் நடித்துள்ள யுவன், மகிமா இருவருமே ப்ளஸ் டூ மாணவர்களுக்கே உரிய உடல்மொழியை வெளிப்படுத்தியுள்ளனர். கருத்த பாண்டி வரும் காட்சிகள் கலகல!
சாட்டையில் ஓட்டைகளும் உண்டு. ஒரே பாடலில் பணக்காரனாவது போன்ற க்ளீஷேக்கள் இந்தப் படத்திலும் உண்டு. ஒட்டுமொத்தப் பள்ளியும் ஒரு ஆசிரியரை மட்டுமே நம்பியிருப்பதாகக் காட்டுவது கொஞ்சம் சினிமாத்தனமான மிகைதானே! மன்னிப்பும் அளவு கடந்த நம்பிக்கையும் சில நேரங்களில் பிழையாகப் போகவும் வாய்ப்பிருக்கிறதல்லவா..
ஆனால் இன்றைக்கு மோசமாக உள்ள அரசுப் பள்ளி ஒவ்வொன்றும் இந்தப் படத்தில் வரும் பள்ளி மாதிரி திருந்தி உயர்ந்தால் எப்படியிருக்கும் என்ற ஏக்கம், அந்தக் காட்சிகளை ஏற்றுக் கொள்ள வைக்கிறது என்பதே உண்மை. பேதமில்லாத கல்விதான் நோக்கம் எனும்போது, அது அரசுப் பள்ளிகளிலேயே கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு இந்த பாழாய்ப் போன மிடில்கிளாஸ் என்றைக்குதான் வருமோ?
இமானின் இசை சுமார். இந்தப் படத்துக்கு அது ஒரு சம்பிரதாயம், அவ்வளவுதான். ஜீவனின் ஒளிப்பதிவு, கதையின் யதார்த்தத்தை மீறாமல் அமைந்திருக்கிறது.
புதிய இயக்குநர் அன்பழகன் தன் கதையில் எந்த வணிகத் திணிப்புகளுக்கும் இடம் கொடுக்காதது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
படைப்புகள் படைப்பாளிகளுக்கானவை அல்ல, சமூகத்துக்கானவை என்பதை உணர்ந்து புதிய இயக்குநருக்குப் பக்கபலமாக இருந்த இயக்குநர்கள் சமுத்திரக்கனி, பிரபு சாலமனுக்குப் பாராட்டுகள்.
Thanks to : Tamil one india