மின்சார பற்றாக்குறைக்கு காரணம் யார் ? ஒரு கருத்துக் கணிப்பு
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், பல மணி நேரம் தொடர் மின் தடைஏற்படுவதால், தொழில் துறையினரும், விவசாயிகளும் கடும்
பாதிப்படைந்துள்ளனர். அதிக மின் தடையைக் கண்டித்து, அவர்கள் போராட்டங்களில்
இறங்கியுள்ளனர்.
தமிழகத்தில், சென்னையைத் தவிர்த்து மீதமுள்ள
மாவட்டங்களில், குறைந்தது, 10 மணி நேர மின் வெட்டு, அமலில் உள்ளது. இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட முக்கிய தொழில்
நகரங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அதிக பாதிப்பில் மக்களும் கோபம்
அடைந்துள்ளனர்.டீசல் விலையும் அதிகரித்து விட்டதால், ஜெனரேட்டர் பயன்படுத்தி கூட, தொழிற்கூடங்களை இயக்க முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. உதிரி பாகங்களைத் தயாரிக்கும், சிறு மற்றும் குறு தொழில் துறை ஏறக்குறைய முடக்கப்பட்டு
விட்டதால், பெரிய
நிறுவனங்களாலும் தொழிலை நடத்த முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக