வறுத்த உணவுகளை கொடுக்காதீங்க! மூளையை பாதிக்கும்!!
அதேபோல் கடைகளில் விற்பனை செய்யப்படும்
டின் பழச்சாறுகளையும் கொடுக்கக் கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக, காய்கறிகள், பழங்கள் போன்றவை உடலுக்கு
நன்மையை அளிக்கும். கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி
பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை என்கிறது ஜெர்னல்
பீடியாட்ரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று. மாறாக இவை உடல் நலத்தைக் கெடுத்து விடுகிறதாம்.
எனவே 100 சதவிகிதம் பழச்சாறு என்றெல்லாம்
கவர்ச்சிகரமாய் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து அதனை குழந்தைகளுக்கும் வாங்கி
கொடுக்காதீர்கள் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் குழந்தைகளை ஊட்டச்சத்தான
உணவை உண்ணுமாறு நீங்கள் எந்த அளவிற்கு வற்புறுத்துகிறீர்களோ, அந்த அளவிற்கு தண்ணீர் அருந்துவதையும் ஊக்கப்படுத்துங்கள்.
சாப்பிட்ட பிறகு முழுதாக ஒரு டம்ளர் நீராவது அவர்கள் குடிக்க வேண்டும்
என்பதை பழக்கப்படுத்த வேண்டும். விளையாட்டின் போது, படித்துக் கொண்டிருக்கும் போது இடை இடையே நீர் அருந்த
வேண்டும் என்பதை சில நாட்களுக்கு நினைவு படுத்துங்கள். எங்கு சென்றாலும்
தண்ணீர் கொண்டு செல்லும் பழக்கத்தையும் கொண்டு வாருங்கள். பழச்சாறு
போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை
உற்சாகப்படுத்துங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
Thanks to : http://tamil.boldsky.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக