டி.என்.பி.எஸ்.சி பொது அறிவு (V.A.O) பாடத்திட்டம்
வணக்கம் .இன்றைய பதிவில் மீதமுள்ள 150 மதிப்பெண்களுக்கான பொது அறிவுத்தாளுக்கு வினாக்கள் எந்தெந்த பகுதியிலிருந்து கேட்கப் படுகின்றன என்பதைப் பார்ப்போம்.(கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியுடைய குரூப் 4 க்கு மட்டுமே பொருந்தும்.இதுவரையில் நடைபெற்ற தேர்வுகளின் அசல் வினாத்தாளை வைத்தே இவை கணக்கிடப் பட்டுள்ளன.
பொது அறிவு வினாக்களுக்கான பாடத்திட்டம்
வினா வகைகள்
| வினாக்கள் | மதிப்பெண்கள் |
1)இந்திய வரலாறு
| 10 வினாக்கள் | 22.5 |
2)இந்தியப் புவியியல் | 10 வினாக்கள் | 22.5 |
3) இந்தியசுதந்திரப் போராட்டம் | 10 வினாக்கள் | 22.5 |
4)இந்திய அரசியலமைப்பு
| 10 வினாக்கள் | 22.5 |
5)பொருளாதாரம் மற்றும் வணிகம் | 5 வினாக்கள் | 7.5 |
| அறிவியில் | ||
6)வேதியியல் | 5 வினாக்கள் | 7.5 |
7)இயற்பியல் | 5 வினாக்கள் | 7.5 |
8)தாவரவியல் | 5 வினாக்கள் | 7.5 |
9)விலங்கியல் | 5 வினாக்கள் | 7.5 |
10)கணிதம் | 10 வினாக்கள் | 22.5 |
10)பொது அறிவு | 7 வினாக்கள் | 7.5 |
11)நடப்புச் செய்திகள் | 7 வினாக்கள் | 7.5 |
13)தமிழ்நாடு,கலாச்சாரம்,இலக்கியம் | 7 வினாக்கள் | 7.5 |
12)அறம்,தத்துவம் | 4 வினாக்கள் | 7.5 |
| மொத்தம் | 100 வினாக்கள் |
150 மதிப்பெண்கள்
|
குறிப்புகள்:
1)மேற்கண்டவற்றிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்..6 ம் வகுப்பிலிருந்து
பத்தாம் வகுப்பிலான புத்தகங்களை வாசித்தாலே போதுமானது.மேலே குறிப்பிட்டவற்றில் ஒன்றிரண்டு வினாக்கள் மாறி வரலாம்.ஆனால் அறிவியல் கணிதம் பொறுத்த மட்டில் 30 வினாக்கள் நிச்சயமாக கேட்கப்படும்.
2)நாட்டுநடப்பு நிகழ்வுகள் 5 லிருந்து 7 வினாக்கள் வரையிலும் கேட்கப்படலாம்.தமிழ்நாடு மொழி இனம் கலாச்சாரத்தை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் இதிலும் 5 முதல் 7 வினாக்கள் கேட்கப்படலாம்.
3)பொது அறிவு வினாக்கள் என்பது பாடம் சார்ந்ததாகவோ உலக விசயங்களோ நாட்டு நடப்பு விசயங்களாகவோ மொழி சம்பந்தப் பட்ட விசயங்களாகவோ கேட்கப்படலாம்..
4)உதாரணமாக உலகின் மிக நீளமான ஆறு எது? என்று கேட்கலாம்..ஐ.நா சபையில் ஆரம்பிக்கப்பட்ட வருடம் எது?,சிலப்பதிகாரம் எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்டது? போன்ற வினாக்களும் இடம் பெறலாம்..
5)வணிகம் பொருளாதாரம் பகுதிக்கு சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்துதான் பெரும்பாலும் கேட்கப்படுகின்றன..
நன்றி..
==========================================================================
டி.என்.பி.எஸ்.சி-அகர வரிசைப்படி சீரமைத்தல்-பாகம்-9

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக