இந்த ஆண்டின் மெகா இசை வெளியீட்டு நிகழ்வான நீதானே என் பொன்வசந்தம் நாளை பிற்பகல் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.
நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடந்தது இந்த நிகழ்ச்சி. ஹங்கேரி நாட்டு இசைக் கலைஞர்களை வரவழைத்து நேரடியாக கச்சேரி நடத்தி கலக்கினார் இளையராஜா.
படத்தின் எட்டுப் பாடல்களையும் லைவாக இசைத்து ரசிகர்களை மயக்கிவிட்டார்இளையராஜா. இதை நேரில் பார்க்க முடியாதவர்கள், தொலைக்காட்சி ஒளிபரப்புக்காக காத்திருந்தனர். ஒளிபரப்பு உரிமை ஜெயா டிவிக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நாளை பிற்பகல் 2.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளி்பரப்பாகிறது என இயக்குநர் கவுதம் மேனன் அறிவித்துள்ளார். முன்னதாக 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி, ஒரு மணிநேரம் முன்னதாகவே ஒளிபரப்பாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக