உணவில் சுவைக்காக சேர்க்கும் பொருட்களில் பஞ்சமே இல்லாமல் கலந்து இருக்கிறது ஆபத்து.
தற்போது பரவலாக காணப்படும், பேசப்படும் உடல் உபாதைகளில் சிறுநீரக கற்கள் என்பது அதிக பிரபலமாகியுள்ளது.
சிறுநீரக கற்கள் பல வகைகள் உள்ளன.
1 கால்சியம் ஆக்ஸலேட் கற்கள்
2 கால்சியம் பாஸ்பேட் கற்கள்
3 யூரிக் அமில கற்கள்
4 ஸ்ட்ருவிட் கற்கள்
5 சிஸ்டைன் கற்கள்

இவைகளுக்கான காரணங்களும் அதன் உணவு வகைகளும் வேறு வேறானவை. ஒவ்வொரு வகை கல்லின் தன்மைக்கு மருத்துவ முறைகளும் வேறு வேறானவை. நாம் உட்கொள்ளும் சோடியம், இதன் அளவானது குறிப்பிட்ட வரையறைக்குள் இருபது நலம். கற்கள் ஓர் முறை வந்து அவதி பட்டவரோ, அல்லது முன் கூட்டி எச்சரிகையுடன் உள்ளவரோ சில உணவு வகைகளை தவிர்த்தல் அல்லது குறைந்த அளவில் எப்போதாவது எடுத்துக்கொண்டால் நலம் பயக்கும். கீழே குறிப்பிட்டுள்ள ரசாயன உப்புக்கள் உடலில் சேருவதும் சிறு நீரக கற்கள் உண்டாக காரணமாகும்.
ஆடம்பரமான ஏ.சி. மாலில் தள்ளு வண்டிகளில் தேவையான பாக்கெட்டுகளை அள்ளி போட்டுகொண்டு, ஐஸ் க்ரீமை நக்கிக்கிகொண்டோ, சாக்லேட்டை கடித்துகொண்டோ வந்து கவுண்டரில் கிரிடெட் அட்டையை கொடுத்து "இழுத்துவிட்டு " லாவகமாக காரை நோக்கி தள்ளுவண்டியை நாம் கொண்டு செல்வோம். அதெல்லாம் சரிதான். ஷெல்பிலிருந்து உணவு பாகெட்டுக்களை எடுக்கும் போது வெறும் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகளை மட்டும் பார்க்காமல் கீழே கண்ட உப்புக்கள் அந்த உணவு பொருளில் அடங்கி யுள்ளனவா என்றும் கவனிப்பது நலம்.
‘அஜினோமோட்டோவில் கலந்-திருக்கும் மோனோ-சோடியம்குளுட்டோமேட் (MSG)' என்பது ஒற்றைத் தலைவலி, சோர்வில் ஆரம்பித்து பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கக் கூடியது' என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
இதை உணர்ந்த சீனா தங்கள் நாட்டில், அஜினோமோட்டோவைத் தடை செய்திருக்கிறது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், சீனா தன் உபயோகத்தைத் தடை செய்திருக்கிறதே தவிர, உற்பத்தியைத் தடை செய்யவில்லை.
அதாவது, உள்ளூரில் தடை செய்யப்பட்ட அஜினோமோட்டோவைத் தான் இந்தியாவுக்கு அனுப்பிவருகிறது.
இந்தியாவில் அஜினோமோட்டோவின் ஆபத்தை உணர்ந்து தடை செய்வது அரசின் கையில் இருக்கலாம்.
ஆனால், நம் வீட்டுக்குள் அஜினோமோட்டோ வராமல் தடுக்கும் வாய்ப்பு நமது கரங்களில்தான் இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக