அவசர அவசரமாய் வெளியில் கிளம்பிக்கொண்டிருந்தேன்.
...... அப்போது அங்கு வந்த நம் நண்பர் "உங்களுக்கு விஷயம் தெரியுமா?" என்று கேட்க, நானும் ஆர்வமாய் என் காதை அவருக்கு குடுக்க, சூடாக சுவையாக பல கிசுகிசுக்களை அள்ளி விட்டார்.
அன்று மாலை கடைத்தெருவில் இன்னொரு நண்பருடன் மிக ரகசியமாக பேசிக்கொண்டிருந்தார் காலையில் என்னுடன் பேசிக்கொண்டு இருந்த என்
நண்பர்.
இப்போது என்னைப்பற்றி கூட சொல்லிக்கொண்டு இருக்கலாமோ என்ற கேள்வி நெஞ்சை பிராண்ட இனி கிசுகிசுக்களுக்கு காதைக் கொடுப்பதில்லை என்று உறுதியாக முடிவெடுத்துக்கொண்டேன் .
நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க ......................

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக