தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை

வீ.ஒ.எ. தேர்வு - ஒரேழுத்து ஒரு மொழி (TNPSC)

ஒரேழுத்து ஒரு மொழி பொருள் உணர்தல் :

தமிழில் உள்ள 247 எழுத்துகளில் 42 எழுத்துக்களுக்கு மட்டும் தனியே பொருள்  உண்டு..அவற்றில் ஏதாவது ஐந்து எழுத்துக்களைக் கொடுத்து அதற்கான பொருள் என்ன என்பதைப் போல வினா அமையும். தனிப் பொருளைத் தரும் 42  எழுத்துக்களைக் காண்போம்..

உயிர் எழுத்துகள்:   


ஆ     -----------     பசு
ஈ       -----------    கொடுத்தல்,பறக்கும் பூச்சி
ஊ     -----------    இறைச்சி,உணவு
ஏ       -----------    அம்பு, இறுமாப்பு
ஐ       -----------    தலைவன்,அரசன்

'ம' வரிசை:
மா      -----------   பெரிய ,மாமரம்
மீ        -----------   மேலே,உச்சி
மூ      -----------  மூப்பு,முதுமை,மூன்று
மே     -----------  அன்பு,மாதம்,மேலே
மை   -----------  கண்மை,இருள்
மோ   -----------  முகர்தல்

'த' வரிசை:
தா       -----------   கொடுத்தல்,கேடு
தீ          -----------  நெருப்பு,சினம்,தீமை
தூ        -----------   வெண்மை,தூய்மை
தே       -----------  தெய்வம்,கடவுள்
தை      -----------  மாதம்

'ப' வரிசை:
பா       -----------    பாட்டு,அழகு,பாதுகாப்பு
பூ         -----------  மலர்,பூமி,
பே      -----------  அச்சம்
பை     -----------  கைப்பை,
போ    -----------  போதல்,செல்லுதல்

'ந' வரிசை:
நா      - நாக்கு,
நீ                -   முன்னிலை, நீ
நே             -   அன்பு,அருள்
நை            -   வருந்துதல்
நோ           -   துன்பம்,நோய்

'க' வரிசை:
கா                   -  சோலை,காவல்
கூ                    - பூமி,உலகம்,
கை                  - உறுப்பு
கோ                 - அரசன்,தலைவன்,பசு,

'வ' வரிசை:
வா       -- >வருதல்
வீ                  -- >மலர்
வை             -- >வைத்தல்,வைக்கோல்
வௌ           -- >கைப்பற்று

'ச' வரிசை:
சா          ==== > சாதல்,இறத்தல்
சி/சீ       ==== > இகழ்ச்சி, வெறுப்பு
சே        ==== > எருது

'ய' வரிசை:
யா    ==== > ஒரு வகை மரம்


                                             தொடரும் 

கருத்துகள் இல்லை: